நெடுஞ்சாலையில் நெல் உலர்த்தும் அவலம்
சாலியமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலையில் நெல் உலர்த்தும் அவலம்
தஞ்சாவூர்
மெலட்டூர்:
அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த உலர் களம் வசதி இல்லை. அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் நெல் உலர்த்துவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல்லை உலர்த்த உலர்களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story