குறுவை சாகுபடி பணி தீவிரம்


குறுவை சாகுபடி பணி தீவிரம்
x

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்

குறுவை சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடியின் இயல்பான பரப்பளவு 44 ஆயிரம் எக்டேராக இருந்தாலும், இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் 60 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 30ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

களை எடுக்கும் பணி

இந்தநிலையில் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் ஆழ்குழாய் பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆற்றுப்பாசனப் பகுதிகளில் மழையைப் பயன்படுத்தி நிலத்தை உழும் பணி தீவிரமாக நடைபெற்றது. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் திருவையாறு, அம்மையகரம், சூரக்கோட்டை, மாரியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்

மழையில் பாதிக்காமல்

குறுவை சாகுபடி தாமதமாக ஜூலை மாதத்தில் நடவு செய்யும்போது அறுவடை காலத்தில் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு அடைகிறது. . எனவே நெற்பயிர்கள் மழையில்பாதிக்காமல் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் அறுவடை செய்தால் மகசூல் நன்றாக இருக்கும். என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story