ரூ.7.25 லட்சம் மதிப்பில் நெற்களம்; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
மானூர் அருகே பள்ளமடையில் ரூ.7.25 லட்சம் மதிப்பில் நெற்களத்தை, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள பள்ளமடையில் நெல்லை எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7.25 லட்சம் மதிப்பில் புதிய நெற்களம் அமைக்கப்பட்டது. இந்த புதிய நெற்களத்தை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். முன்னதாக அவரை, ஊர் பொதுமக்கள் திரளாக நின்று பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், விவசாயிகள் சங்க தலைவர் முகமதுஇப்ராஹிம், செல்வின்துரை, பஞ்சாயத்து தலைவர் மெர்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், மங்கையர்க்கரசி உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story