எந்திரம் மூலம் கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம்


எந்திரம் மூலம் கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம்
x

கும்பகோணத்தில் எந்திரம் மூலம் கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் எந்திரம் மூலம் கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோடை நெல் சாகுபடி

கும்பகோணத்தில் பல்வேறு கிராமங்களில் கோடை நெல் சாகுபடி நடந்து வருகிறது. இந்த நெல் சாகுபடி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் மாத இறுதி வரை நடைபெறும்.இதில் கோடை வெப்பத்தை தாங்க கூடிய பல்வேறு நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். முற்றிலும் பம்பு செட் மூலம் பாசனம் செய்யப்பட்டு நடைபெறும் இந்த நெல் சாகுபடியை ஒரு சில விவசாயிகள் மட்டும் செய்வது வழக்கம்.மேலும், ஆற்று பாசனத்தின் மூலமும் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கும்பகோணத்தில் தற்போது ஆங்காங்கே கோடை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. எந்திரம் மூலம் நடைபெறும் இந்த நெல் அறுவடையில் நாள் ஒன்றுக்கு ஒரு எந்திரத்தின் மூலம் சுமார் 10 ஏக்கர் வரை அறுவடை செய்யப்படுகிறது.

இயற்கை உரம்

இதுகுறித்து கும்பகோணம் அருகே உள்ள புளியஞ்சேரியில் நெல் அறுவடை செய்து வரும் விவசாயி ஒருவர் கூறுகையில், எனது வயலில் சம்பா அறுவடை முடிந்த பிறகு 120 நாட்கள் கொண்ட குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்தேன்.தற்போது அதன் அறுவடை பணிகள் எந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. கடும் வெயில் காரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 மூட்டை நெல் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. இது குறைவான மகசூல் தான். இதைத்தொடர்ந்து எனது நிலத்தில் இயற்கை உரங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story