நெல் அறுவடை எந்திர ஆபரேட்டர் தற்கொலை
நெல் அறுவடை எந்திர ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). நெல் அறுவடை எந்திர ஆபரேட்டர். இவருடைய மனைவி பவித்ரா (22). இந்த தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் பவித்ரா கோபித்து கொண்டு, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் காரணமாக மனவேதனை அடைந்த கார்த்திக், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story