எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி
எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணியை வேளாண்மை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தில் எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் முறை குறித்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆத்மா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். டி.கே. தணிகாசலம் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா கலந்துகொண்டு எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், இணை இயக்குனர் ராகினி, மாவட்ட கவுன்சிலர் கே.ஏ. குணசேகரன், கே.ஏ.மோகன்ராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் குலோத்துங்கன், ராஜா உள்பட விவசாயிகள் பலர் பேசினார்கள். இறுதியில் விவசாயி டி.கே.முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story