அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட பூமி பூஜை
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட பூமி பூஜை நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சியில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான பூமி பூஜை நடந்தது. இதை மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா குழுத்தலைவர் செல்வ செங்குட்டுவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார், வட்டார ஆத்மா குழு இயக்குனர் மதியழகன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜய கணபதி, நரிமணம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story