நெல்கொள்முதல் நிலையங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும்-கலெக்டர்


நெல்கொள்முதல் நிலையங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும்-கலெக்டர்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும் என வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த கலெக்டர் முருகேஷ் கூறினார்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும் என வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த கலெக்டர் முருகேஷ் கூறினார்.

தொடக்க விழா

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அழிவிடைத்தாங்கி கிராமத்தில் ரூ.8.58 கோடியில் நூலக கட்டிடம், உணவு தானிய கிடங்கு, 12 இருளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழாவும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்்க விழாவும் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ். பார்வதி சீனிவாசன் வரவேற்றார். செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிேவந்தன், செய்யாறு ஒ.ஜோதி எம்.எல்.ஏ.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்கொள்முதல் நிலையங்கள்

நிகழ்ச்சியில் நூலக கட்டிடம், உணவு தானிய கிடங்கு, இருளர் குடியிருப்புகளை திறந்து வைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் முருகேஷ்தொடங்கி வைத்து பேசியதாவது:-

மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதிகம் இருப்பதால் அனைத்து கிராமங்களிலும் அடுத்த வாரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

மாவட்டத்திலுள்ள 18 ஒன்றியத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நமது மாவட்டம் வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்துவதில் சிறப்பிடம் பெற்று உள்ளது.

நிலத்தடி நீர்மட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 1333 ஆழ்துளை கிணறுகள் நிலத்தடி நீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் நமது மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் (ஊராட்சிகள்) சுரேஷ்பாபு, ஒன்றிய குழு தலைவர்கள் ராஜி (வெம்பாக்கம்), பாபு (செய்யாறு), திலகவதி ராஜ்குமார் (அனக்காவூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தி.மயில்வாகனன், பாஸ்கரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கர், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story