நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்
நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்
வேலூரை அடுத்த ஊசூரில் விவசாயிகளின் நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டது. அறுவடை காலங்களில் மட்டும் திறந்து வைக்கப்பட்ட இந்த கொள்முதல் நிலையம், கடந்த 2 மாத காலமாக மூடியே கிடக்கிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் அறுவடை செய்ய தொடங்கி விட்டனர். பருவ மழை பெய்யும் காலம் என்பதால் இந்த நேரத்தில், விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story