கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்


கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்
x

பருவமழை தொடங்குவதற்கு முன்பு கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

பருவமழை தொடங்குவதற்கு முன்பு கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடை பணிகள்

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஜுன் முதல் வாரத்திலேயே காவிரி நீர் வந்தடைந்ததாலும், பம்புசெட் வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்தனர். ஆற்றுநீரை நம்பி சாகுபடி செய்பவர்களும் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொள்முதல்

இந்த மாதத்தின் முதல்வாரத்தில் தினந்தோறும் மழைபெய்ததால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. அறுவடை செய்த நெல்மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து அடுக்கிவைத்து விற்பனை செய்வதற்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 117 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது. தினமும் 500 முதல் 800 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய தொடங்கினர்.

சேமிப்பு கிடங்குகள்

இந்தநிலையில் வழுவூர், பெருஞ்சேரி, எழுமகளுர், நல்லத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது. தற்போது. எந்திரம் மூலம் அறுவடை செய்வதால் ஒருசில வாரங்களிலேயே ஒவ்வொரு கிராமங்களில் அறுவடை முடிவடைந்து விடுகிறது.ஆனால் நெல்லை விற்பனை செய்வதற்கு கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பு கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story