4 நடமாடும் நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் செயல்படும்


4 நடமாடும் நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் செயல்படும்
x

மயிலாடுதுைற மாவட்டத்தில் 4 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறியுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுைற மாவட்டத்தில் 4 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்கொள்முதல் நிலையங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வந்த 173 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது நெல் அறுவடை பருவம் முடிவடைந்த நிலையில் மூடப்பட்டு விட்டன. இந்நிலையில் பருவம் தவறி பெய்த கன மழையால் நெல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழிந்து மீண்டும் நெல் சாகுபடி சில இடங்களில் செய்யப்பட்டது. அவ்வாறு காலதாமதமாக சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சில விவசாயிகளிடம் உள்ளதாகவும், தற்போது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் வியாபாரிகளிடம் மிகவும் குறைந்த விலையில் நெல்லை விற்கக் கூடிய நிலை உள்ளது தெரியவந்தது.

4 தாலுகாக்களில்...

இதனால் காலதாமதமாக சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்து நெல்லை இருப்பு வைத்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் தலா ஒரு கொள்முதல் நிலையம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.எனவே, பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு தாமதமாக நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.இந்த கொள்முதல் நிலையங்கள் சில நாட்களுக்கு மட்டுமே செயல்படும். எனவே உரிய நேரத்தில் தேவையான சான்றுகளுடன் வந்து விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story