தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்


தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வேண்டுகோள் அறிவுறுத்தி உள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தரமான விதைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது 2-ம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும். விதை விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்து, விதைகளை வாங்க வேண்டும். அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

மேலும், விதைகளை வாங்கும் முன்பு அந்த விதை குவியலுக்குரிய முளைப்புத் திறன், பகுப்பாய்வு அறிக்கையை கேட்டு விவசாயிகள் சரிபார்க்க வேண்டும். விதைகளின் தரத்தை அறிந்துக்கொள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதை பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிக்கு பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக ரூ.80 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப்பாய்வு அறிக்கையை பெற்று கொள்ளலாம். நெல் விதை குவியல்களின் தரம் அறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story