நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 12 டன் விதை நெல் இருப்பு


நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 12 டன் விதை நெல் இருப்பு
x

நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 12 டன் விதை நெல் இருப்பு

திருப்பூர்

முத்தூர்,

நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 12 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

கீழ்பவானி பாசன பகுதிகள்

நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை,

பரஞ்சேர்வழி, பாப்பினி ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடப்பு ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு பவானிசாகர் அணையில் இருந்து கால்வாயில் கடந்த 12- ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் டிசம்பர் மாதம் இறுதி வரை வரும்.

இந்த தண்ணீரை பயன்படுத்தி 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண மற்றும் திருந்திய நெல் ஆகிய நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. நெல் சாகுபடியில் முதல் கட்டமாக விதை நெல் வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

12 டன் விதை நெல்

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் காங்கயம் வட்டார வேளாண்மை துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர்.20, கோ.ஆர். 41, ஏ.டி.டி.45, வி.ஜி.டி 1 சான்று மற்றும் ஆதார இனத்தை சேர்ந்த 125 முதல் 135 நாள் வயதுடைய மத்திய கால ரக விதை நெல்கள் மொத்தம் 12 டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் உயிர் உரம் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியவையும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தென்னைக்கு நுண்ணூட்டம் கரும்பு நுண்ணூட்டம், பயிறு வகை நுண்ணூட்டம் மற்றும் சிறுதானிய நுண்ணூட்ட உரங்களும் தயார் நிலையில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு நேரில் வந்து மானிய விலையில் பெற்று செல்லலாம் என்று வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.ரவி தெரிவித்து உள்ளார்.



Next Story