அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம்  டன் நெல்
x

பேரளத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நன்னிலம், மார்ச்.11-

பேரளத்தில் இருந்து திருச்சிக்கு 2ஆயிரம் டன் நெல் அரவைக்காக சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. நன்னிலம், குடவாசல் பகுதிகளில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ெரயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டு கூலி தொழிலாளர்கள் மூலம் சரக்கு ெரயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டது. இதன் பின் ெரயில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story