நீடாமங்கலத்தில் இருந்து ராணிப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து ராணிப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து ராணிப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக ராணிப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story