நீடாமங்கலத்தில் இருந்து வேலூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு
நீடாமங்கலத்தில் இருந்து வேலூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகா பகுதிகளில் இயங்கிவரும் அரசுநேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் நெல் மூட்டைகள் அரவைக்காக வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story