பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில்முன்னாள் மாணவியர் சங்க கூட்டம்


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில்முன்னாள் மாணவியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 5-வது முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் நா.கலைக்குரு செல்வி தலைமை தாங்கினார். இணை பேராசிரியரும், முன்னாள் மாணவசங்க ஒருங்கிணைப்பாளருமான சுமதி வரவேற்று பேசினார். கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி, முன்னாள் மாணவி சுஜிக்கு நினைவு பரிசு வழங்கினார். பின்னர் முன்னாள் மாணவி சுஜி பேசுகையில், நான் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் கொரோனா சமயத்தில் பணிபுரிந்த போது ஒரு சவாலாக இருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு செவிலியர்களின் எண்ணிக்கை இல்லை. கொரோனா வார்டில் பணிபுரியும்போது தற்காப்பு உடைகளை அணிவதன் மூலம் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். கொரோனாவை வெல்வதற்கு மன தைரியம் முக்கியம், என்றார். 4-ம் ஆண்டு மாணவிகள் பொன்சிநேகா, சிங்கப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இணை பேராசிரியை சங்கீதா நன்றி கூறினார்.


Next Story