பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் சாதனை


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் சாதனை
x

அகில இந்திய வலுதூக்கும் போட்டியில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் சாதனை படைத்தார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

ஜம்மு காஷ்மீரில் அகில இந்திய வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழக அணியின் சார்பாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் ராகுல் ரோஹித் 64 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்டு, ஸ்குவாட் பிரிவில் 185 கிலோ, பெஞ்ச் பிரஸ் பிரிவில் 100 கிலோ, டெட் லிப்ட் பிரிவில் 215 கிலோ என மொத்தம் 500 கிலோ எடைகளை தூக்கி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார். மேலும் இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் மே மாதம் நடைபெற உள்ள ஆசிய போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

சாதனை படைத்த வீரரை இந்திய வலுதூக்கும் சங்கத் தலைவர் சதீஷ்குமார், தென்னக ரெயில்வே விளையாட்டு துறை அதிகாரி வினோத்போலார் பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற வீரரை தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கத்தின் சேர்மன் மோகன் சங்கர், தலைவர் ராஜா எம்.எல்.ஏ., செயலாளர் நாகராஜன், பொருளாளர் ரவிக்குமார், இணைத்தலைவர் லோகநாதன், நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்கத் தலைவர் சிவராமலிங்க ரவி, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் தளவாய் மூர்த்தி, நெல்லை மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் கள்ளத்தியான் என்ற கண்ணன், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழகத்தின் பொருளாளர் சரவணகுமார், பயிற்சியாளர் தங்கராஜ் பாண்டியன் மற்றும் ஆசிய வலுதூக்கும் சாம்பியன் உதயகுமார், தேசிய சாம்பியன் சக்தி ஆகியோர் பாராட்டினர்.


Next Story