பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம்


பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம்
x

பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

தக்கலை,

பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம் நடந்தது.

நகராட்சி கூட்டம்

பத்மநாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் அருள் சோபன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணி, கமிஷனர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் பேசினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

நாகராஜன் (பா.ஜ.க.):-பத்மநாபபுரம் அரண்மனைக்கு செல்லும் நுழைவு பகுதியில் அரசியல் கட்சியால் வைக்கப்பட்ட வரவேற்பு பலகையை புகார் அளித்த பிறகும் ஏன் இன்னும் மாற்றவில்லை.

இதற்கு பதில் அளித்த தலைவர் மற்றும் கமிஷனரின் விளக்கத்தை ஏற்றுகொள்ளாத பா.ஜ.க. கவுன்சிலர்கள் உண்ணிகிருஷ்ணன், செந்தில்குமார், கீதா, சிவா ஆகியோர் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த பிரச்சினை சம்பந்தமாக இருதரப்பையும் அழைத்து சுமூக தீர்வு ஏற்படுத்தி அடுத்த கூட்டத்திற்குள் முடிவு செய்யப்படும் என தலைவர் அருள் சோபன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் கூட்டப்பொருள் பற்றிய விவாதத்தில், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக மக்காயிபாளையம் ஜமாத் சார்பாக கேட்ட அரசு புறம்போக்கு இடத்தை அவர்களுக்கு கொடுப்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story