பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பத்மநாபபுரம்  அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி

தக்கலை,

கோடைவிடுமுறையில் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையை பார்க்க வழக்கத்தை விட கூட்டம் ஒரே நேரத்தில் குவிந்தனர். மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட அரண்மனையை பார்த்து அவர்கள் ரசித்தனர். மேலும் அவர்கள் செல்பி எடுத்தபடி மகிழ்ந்தனர்.

கூட்டம் அதிகமாக குவிந்ததால் பத்மநாபபுரம் 4 ரத வீதிகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story