பெயிண்டர் தற்கொலை
சேலம் அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
கொண்டலாம்பட்டி:-
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 37), பெயிண்டர். இவருடைய மனைவி மலர்மதி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜா குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதனால் டாக்டர்கள் கூறிய அறிவுரையின் பேரில் கடந்த 3 மாதங்களாக ராஜா குடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவருடைய மனைவி மலர்மதி கோபித்துக்கொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த ராஜா, வீட்டில் யாரும் இல்லாத போது விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story