பெயிண்டர் திடீர் சாவு
பெயிண்டர் திடீரென இறந்தார்.
அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்தவர் சிட்டிபாபு (வயது 42). பெயிண்டர். இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் சிட்டி பாபுவை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிட்டிபாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire