பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை


பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் கன்சால்பேட்டையை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 39), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜானகிராமனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாகவும், அதனால் இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஜானகிராமன் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அதைக்கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story