புதிய வீடு கட்டும் இடத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி


புதிய வீடு கட்டும் இடத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
x

குடியாத்தம் அருகே புதிய வீடு கட்டும் இடத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் அருணாசலநகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50), பெயிண்டர். இவரது மனைவி சரஸ்வதி, அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

குடியாத்தம் அருகே செதுக்கரை பொன்னம்பட்டி பகுதியில் சீனிவாசன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இன்று வழக்கம்போல் வீடு கட்டும் பணியில் பணியாளர்கள் இருந்தனர்.

பணியாளர்கள் சென்ற பின்னர் சீனிவாசன் வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து வந்தார். மாலை ஆகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் புதிதாக வீடு கட்டும் இடத்திற்கு வந்து பார்த்தனர்

அப்போது மோட்டார் போட சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சீனிவாசன் இறந்து கிடந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story