மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலி
முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது80). பெயிண்டர். நேற்றுமுன்தினம் இவர் முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து நடந்து வந்துள்ளார். ெரயில்வே கேட் அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக கதிர்வேல் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கதிர்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கதிர்வேல் மகன் ராமசாமி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.