வாகனம் மோதி பெயிண்டர் பலி


வாகனம் மோதி பெயிண்டர் பலி
x

வாகனம் மோதி பெயிண்டர் இறந்தார்

திருநெல்வேலி

கங்கைகொண்டான்:

நெல்லை பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை முதலாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக்அப்துல் காதர் (வயது 53). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கங்கைகொண்டான் அருகே உள்ள மான்கள் சரணாலயம் அருகில் ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலைக்காக சென்றிருந்தார். வேலையை முடித்துவிட்டு இரவில் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு குறுக்காக நடந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷேக் அப்துல்காதர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று ஷேக் அப்துல் காதர் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story