போதையில் தகராறில் ஈடுபட்ட பெயிண்டர் படுகொலை
அரக்கோணம் அருகே குடிபோதையில் தகராறு செய்த பெயிண்டர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் அருகே குடிபோதையில் தகராறு செய்த பெயிண்டர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் தகராறு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மாரிமுத்து (வயது 26). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கீழ்குப்பம் பகுதியில் உள்ள முடி திருத்தும் கடை அருகே மது போதையில் அந்த வழியாக சென்றவவ்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கீழ்குப்பம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஏசு மகன் மைக்கேல் (23) என்ற வாலிபர் முடி திருத்தம் செய்ய வந்துள்ளார். அப்போது அவரிடமும் மாரிமுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மைக்கேல் முடிதிருத்தும் கடையில் இருந்த ஷேவிங் செய்யும் கத்தியால் மாரிமுத்துவின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் அறுத்துள்ளார்.
படுகொலை
இதில் மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இ'த்திற்கு வி்ரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மைக்கேலை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.