ஓவியர்கள் சங்க கூட்டம்
திருவாரூரில் ஓவியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
திருவாரூர்
திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை மண்டல தலைவர் தங்க செல்வம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், நிர்வாகிகள் பாரதிராஜா, மகேந்திரன், பிரபு, மாரிமுத்து, புகழேந்தி, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-மாவட்ட அளவில் அரசு விளம்பரம் மற்றும் ஓவிய எழுத்து வேலைகளை மாவட்டத்தில் உள்ள ஓவியர்களுக்கு வழங்க வேண்டும். வேலையின்றி நலிவடைந்து வரும் ஓவியர்களுக்கு சிறு தொழில் முனைவோர் கடன் உதவி வழங்க வேண்டும்.வடமாநில தொழிலாளருக்கு வேலை கொடுப்பதை தடுத்து தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story