ஓவியர்கள் நலச்சங்க கூட்டம்


ஓவியர்கள் நலச்சங்க கூட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஓவியர்கள் நலச்சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மார்க்கெட் ரோடு தேவர் மகாஜன சங்க திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சம்சு கனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் தங்கமாரியப்பன், அவை தலைவர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அரசு தொழில் முனைவோர் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர்கள், ஓவியர்களுக்கு சான்றிதழ்கள், மத்திய அரசின் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் அட்டை, புதிய உறுப்பினர்களுக்கான சேர்க்கை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், கயத்தாறு ஒன்றிய தலைவர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் மாடசாமி, அமைப்பு செயலாளர் பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story