பெயிண்டரின் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம்


பெயிண்டரின் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம்
x

தஞ்சை அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெயிண்டரின் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமடைந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு ஆனந்தம் நகரை சேர்ந்தவர் ஆனந்தம் (வயது 40). இவர் பெயிண்டராக உள்ளார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து சேதமாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா?அல்லது தானாக தீப்பிடித்து எரிந்ததா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story