கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், காலண்டர் ஓவியர்களுக்கு முன்னோடியாக திகழும் ஓவியர் கொண்டையராஜ் நினைவாக, சித்திரம் கலைக்கூட ஓவிய கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ஷன்மதி மற்றும் ரித்தீஷ் ராம், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஓவியர் கார்த்திகைசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

ஓவியர் எஸ்.கார்த்திகை செல்வத்தின் 'ஓவிய மாமேதை கொண்டையராஜு: ஓவியக்கலை சொல்லும் கோவில்பட்டி' என்ற புத்தகத்தின் முதல் பிரதியை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பெற்று கொண்டார்.

கோவில்பட்டி காலண்டர் ஓவியர்கள், சித்திரம் கலைக்கூட மாணவர்கள், கல்வி குழும மாணவர்களின் ஏராளமான ஓவிய படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், கே.ஆர். கல்லூரி முதல்வர் மதிவண்ணன், சட்ட ஆலோசகர் சம்பத்குமார், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், நகராட்சி கவுன்சிலர் கவியரசன், அ.தி.மு.க. எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சித்திரம் கலைக்கூட ஓவியர் எஸ்.கார்த்திகைசெல்வம் மற்றும் கலைக்கூட ஓவிய மாணவர்கள் செய்திருந்தனர்.


Next Story