புத்தடி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
மங்கைநல்லூர் புத்தடி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் அருகே மங்கநல்லூரில் புத்தடி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டும் நிழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று பால்குட திருவிழா நடந்தது.முன்னதாக பக்தர்கள் வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், அலகு காவடி, பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு காப்பு களைத்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story