காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
வாய்மேடு அருகே காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தானிக்கோட்டகம் கோட்டைக்காடு காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story