மதுரைவீரன் கோவிலில் சித்திரை திருவிழா
மதுரைவீரன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
கரூர்
வேலாயுதம்பாளையம், அண்ணா நகரில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்க்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலையில் கோவில் பூசாரி அருள்வந்து ஆடி அரிவாள் மீது ஏறி நின்று ஆண், பெண்கள் மீது சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி (பேய் விரட்டும் நிகழ்ச்சி) நடந்தது. அதன் பின் கிடா விருந்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story