பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பொங்கல் திருவிழா
ஏழாயிரம்பண்ணையில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்று விழாவினை முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன் கோவில் உள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு அம்மன் தினமும் அலங்கரிக்கப்பட்ட ரிஷப, குதிரை, அன்னபட்சி, காமதேனு, சிம்ம வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
ேதரோட்டம்
வருகிற 30-ந் தேதி பொங்கல் திருவிழாவாக அம்மன் காமதேனு வாகனத்தில் பழைய ஏழாயிரம் பண்ணை மண்டகபடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 1-ந்தேதி கயிறுகுத்து திருவிழா நடைபெறுகிறது. அப்போது கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிடுதல், முத்து செலுத்துதல், அக்னிசட்டி செலுத்துதல், கயிறுகுத்துதல், உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
2-ந் தேதி கோவில் வளாகத்தில் கோவை வாழ் ஏழாயிரம் பண்ணை நாடார் உறவின் முறை பராசக்தி மாரியம்மன் பக்தர் குழு, கோவை ஆதிபராசக்தி மாதர் சங்கம், ஏழாயிரம் பண்ணை அன்னை பராசக்தி மாதர் சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 4-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.