பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பச்சையாபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 4-ம் நாள் பத்திரகாளியம்மன் கோவில் பால்குடம் நிர்வாக கமிட்டி சார்பில் மாவிளக்கு ஊர்வலம், 101 அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது. அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story