சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைதொடர்ந்து நாள்தோறும் சாமி வீதியுலா நிகழ்ச்சியும், அபிஷேக ஆராதனையும் நடந்து வருகிறது. நேற்று சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியம், தேன், இளநீர், நெய், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் மஞ்சள் நீராட்டு விழா வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story