இன்று பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து
பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி
கரூர் மாவட்டம் வீரராக்கியம் ரெயில் நிலையம் முதல் மாயனூர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி (வண்டி எண் 16844) பாலக்காடு டவுன் முதல் திருச்சி சந்திப்பு வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கரூர் ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர்-திருச்சி இடையே இந்த ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண் 06809) இன்று 1 மணி நேரம் தாமதமாக திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்லும். மேலும் (வண்டி எண் 16843) திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில் 1 மணி நேரத்திற்கு வழித்தடங்களில் பொறியியல் பணிகளுக்கு ஏற்றார் போல் தாமதமாக செல்லும். மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story