பழனி முருகன் கோவில் பாதுகாவலர்கள் போராட்டம்


பழனி முருகன் கோவில் பாதுகாவலர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பாதுகாவலர்கள் பலர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனத்தின் கீழ் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக அவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பணியாற்றும் பாதுகாவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்க பகுதியில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முறையாக சம்பளம் வழங்காததால் தங்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பளத்தை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பாதுகாவலர்கள் கோவில் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் கோவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பளம் வழங்குவது பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாதுகாவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story