பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம் - ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்
பழனியில் முருகன் கோவிலி ல்குடமுழுக்கு மற்றும் தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில், வரும் 27-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தற்போது பழனியில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவில் அடிவாரம், சன்னதி வீதி மற்றும் கிரிவல வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து அகற்றினர்.
Related Tags :
Next Story