ஏரி கரைகளில் பனைவிதை, பழவகை மரக்கன்றுகள்


ஏரி கரைகளில் பனைவிதை, பழவகை மரக்கன்றுகள்
x

ஏரி கரைகளில் பனைவிதை, பழவகை மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சந்திப்பு விழா நடத்தினர்். பின்னர் அவர்கள் பொன்னேரி சுற்றுப்பகுதியில் உள்ள சாலைகள், ஏரி கரைகள உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டனர். குழு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி குட்டி என்பவர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பழவகை மரக்கன்றுகளும், 1000 பனை விதைகளும் நடப்பட்டன. அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story