பனை விதைகள் விதைக்கும் விழா


பனை விதைகள் விதைக்கும் விழா
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பனை விதைகள் விதைக்கும் விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பேரணி மற்றும் பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது. பேரணிக்கு தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குனர் அமலன் தலைமை தாங்கினார். கோல்பிங் இந்தியா தேசிய இயக்குனர் மரியசூசை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பேரணியை தொடங்கி வைத்தார். அந்தோணியார்புரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி பனை விதைகள் நடும் இடத்தில் முடிவடைந்தது.

அங்கு நடந்த பனை விதை விதைத்தல் நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பனை விதைகளை நடவு செய்து பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள், குழந்தைகள் பனை விதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி பல்நோக்கு சமூகசேவை சங்க நிதி நிர்வாகி ஜான்சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story