ஏரிக்கரையில் வீணாக கொட்டப்பட்டுள்ள பனை விதைகள்
ஏரிக்கரையில் பனை விதைகள் வீணாக கொட்டப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளை மேம்படுத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் 52 லட்சம் பனை விதைகள் 5 மணிநேரத்தில் நூறு நாள் பணியாளர்கள் கொண்டு நடவு செய்யப்பட்டு உலக சாதனை செய்யப்பட்டது. சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்திலும் நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
மேலும் நூறு நாள் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட சுமார் 5,000 பனை விதைகளை நடவு செய்யாமல் ஏரிக்கரை மீது கொட்டப்பட்டுள்ளது. கலெக்டரின் உத்தரவின் பேரில் 100 நாள் வேலை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பனை விதைகளை நடவு செய்யாமல் வெட்ட வெளியில் கொட்டப்பட்டுள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story