பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம்


பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
x

பனை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டியில் இருந்து ஆரியூர் செல்லும் சாலையோரத்தில் ஏற்பட்ட தீயில் காடுகள் மற்றும் சாலையோரத்தில் அடுத்தடுத்து இருந்த பனை மரம் தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் அடுத்தடுத்து இருந்த பனை மரங்களுக்கும் பரவியது. இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசமடைந்தன. மேலும் சாலையோரத்தில் இருந்த காடுகளும் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தன. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story