பாம்பலம்மன் கோவில் பங்குனி திருவிழா
பாம்பலம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
கரூர்
தோகைமலை அருகே உள்ள தளிஞ்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாம்பலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் 2-வது நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், கிடா மற்றும் சேவல்களை பலி கொடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அன்று இரவு கருப்பசாமி வாகனம் முன்செல்ல முத்துப்பல்லக்கில் பாம்பலம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக சென்றனர். 3-ம் நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டுடன் பாம்பலம்மன் கரகம் வீதி உலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story