பம்பை உடுக்கை சிலம்பு கலைஞர்கள் ஊர்வலம்
திண்டிவனத்தில் பம்பை உடுக்கை சிலம்பு கலைஞர்கள் ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம்
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்ட சிவசக்தி பம்பை உடுக்கை சிலம்பு கலைஞர்கள் நல சங்கம் சார்பில் 4-ம் ஆண்டு தொடக்க விழா திண்டிவனத்தில் நடைபெற்றது. இதையொட்டி தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் சங்கம் சார்பில் திண்டிவனம் ரெயிலடி பிள்ளையார் கோவிலில் இருந்து கலைஞர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் திண்டிவனம் மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பம்பை உடுக்கை சிலம்பு கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர். இந்த ஊர்வலம் செஞ்சி ரோட்டில் உள்ள மயிலம் முருகன் திருமண மண்டபத்துக்கு வந்தது. இதில் கவுரவ தலைவர்கள் நல்லம்பாக்கம் காளியப்பன், மொளசூர் ரவிச்சந்திரன், மாநில தலைவர் காணை சத்யராஜ், வி.புதுப்பாக்கம் பெருமாள், பாரதிதாசன் பேட்டை சரவணன், மொளசூர் ரவிக்குமார், அய்யந்தோப்பு சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story