அம்மா உணவகத்தில் சாம்பார் சாதத்தில் கிடந்த பாம்பரணை


அம்மா உணவகத்தில் சாம்பார் சாதத்தில் கிடந்த பாம்பரணை
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் சாம்பார் சாதத்தில் பாம்பரணை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்தவர் சரவணன். எல்.ஐ.சி. ஏஜெண்டான இவர் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட சரவணன் மருத்துவமனைக்கு அருகே உள்ள அம்மா உணவகத்தில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் 4 சாம்பார் சாதத்தை டிபன் பாக்சில் பார்சல் வாங்கி சென்றார்.

வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சாம்பார் சாதத்தை சரவணன் சாப்பிட்டார். அப்போது சாதத்தில் நீளமாக பீன்ஸ் போல் ஒன்று தட்டப்பட்டுள்ளது. உடனே அதை எடுத்து பார்த்த போது அது இறந்த நிலையில் கிடந்த பாம்பரணை என்று தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் 2 முறை வாந்தி எடுத்தார். தொடர்ந்து அவர் பாம்பரணை கிடந்த சாம்பார் சாதத்துடன் அம்மா உணவகத்திற்கு வந்தார். ஆனால் அம்மா உணவகம் மூடப்பட்டு இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், சரவணனிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், சாதத்தில் பாம்பரணை கிடந்தது உண்மை தானா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story