பணகுடி அமல அன்னை ஆலய விண்ணேற்பு திருவிழா


பணகுடி அமல அன்னை ஆலய விண்ணேற்பு திருவிழா
x

பணகுடி அமல அன்னை ஆலய விண்ணேற்பு திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி புனித அமல அன்னை ஆலயத்தில் அமல அன்னை விண்ணேற்பு திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் மாலையில் நற்கருணை ஆசீர், 2-ம் நாள் காலையில் திருப்பலி, மாலையில் புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து மாதா சொரூப சப்பர பவனி நடந்தது. 3-ம் நாள் காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், மாலையில் அமல அன்னை சப்பர பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்கு குரு இருதயராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.


Next Story