பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு-2 பேர் மட்டுமே பங்கேற்றதால் கூட்டம் ஒத்தி வைப்பு


பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு-2 பேர் மட்டுமே பங்கேற்றதால் கூட்டம் ஒத்தி வைப்பு
x

பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தை 10 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். 2 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம்

பனமரத்துப்பட்டி:

ஒன்றியக்குழு கூட்டம்

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் 6 பேரும், தி.மு.க. சார்பில் 5 பேரும், பா.ம.க.- இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதன் பதவி வகித்து வருகிறார்.

பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

10 பேர் புறக்கணிப்பு

கூட்டத்தில் அ.தி.மு.க. சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் காவேரிசித்தன், மஞ்சுளா முருகன் ஆகிய 2 பேர் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 8 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் என 10 பேர் ஒன்றியகுழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான கவுன்சிலர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டு நவம்பர், மற்றும் டிசம்பர் மாதத்தில் நடந்த 2 ஒன்றிய குழு கூட்டங்களிலும், தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

பரபரப்பு

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறி பெரும்பாலான கவுன்சிலர்கள் கையெழுத்து விட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே நேற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் மீது கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி பணிகளின் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


Next Story