பாணாவரம் பள்ளி மாணவர்கள் 64 பதக்கங்கள் பெற்று சாதனை


பாணாவரம் பள்ளி மாணவர்கள் 64 பதக்கங்கள் பெற்று சாதனை
x

பாணாவரம் பள்ளி மாணவர்கள் 64 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

தமிழக அரசு உத்தரவின் பேரில் பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காவேரிப்பாக்கம் மற்றும் பனப்பாக்கம் ஆகிய பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் கபடி, கால்பந்து, பூப்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் 80 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 12 தங்கப்பதக்கம், 12 வெள்ளி பதக்கம், 40 வெண்கல பதக்கங்கள் உள்பட 64 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவர் ஹேமநாதன் 80 மீட்டர் ஓட்டத்தில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்து மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கங்களும், கோப்பைகளும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசங்கர், உடற்கல்வி ஆசிரியர் எலன் பிரபு, உதவி தலைமை ஆசிரியர் கோபி மற்றும் சக ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.


Next Story